
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவரைக் கொன்ற இலங்கை கடற்படையினரைக் கண்டித்து 3-வது நாளாக மீனவர்கள் இன்று (அக்.22) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் அக்.18-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில், எஸ்.சவுந்தரராஜன் என்பவருக்குச் சொந்தமான படகில் ராஜ் மகன் ராஜ்கிரண் (30), சுதாகர் மகன் சுகந்தன் (30), அருளானந்தன் மகன் சேவியர் (32) ஆகிய 3 பேரும் சுமார் 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் மறுநாள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

