
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் தமிழகத்துக்கு அதிக அளவு மழை கிடைக்கும். அத்தகைய வடகிழக்குப் பருவமழை நேற்று (அக். 25) தமிழகத்தில் தொடங்கியதாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

