
புதுச்சேரியில் புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(அக். 24) வெளியிட்ட தகவலில்: ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,456 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-37, காரைக்கால்-11, ஏனாம்-1, மாஹே-12 பேர் என மொத்தம் 61 பேருக்கு (1.77 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

