
எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டுசெல்ல கன்வேயர் அமைக்கும் பணியின்போது, கொற்றலை ஆற்றின் நீர்வழிப் பாதையில் கொட்டப்பட்ட கட்டுமானப் பொருட்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டுசெல்லும் கன்வேயர் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் செல்வதோடு, சுற்றுச்சூழல் அனுமதியையும் மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

