
புதுச்சேரியில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (அக்.26) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,122 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-20, காரைக்கால்-10, ஏனாம்-2, மாஹே-9 பேர் என மொத்தம் 41 பேருக்கு (1.31 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

