
கோவை குற்றாலம், பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலாத் தலங்கள் நாளை மறுநாள் (செப். 06) முதல் திறக்கப்படுவதாக, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை காரணமாக, கோவை காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட பூச்சமரத்தூர், போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட கோவை குற்றலாம் ஆகிய சூழல் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், அரசு வழிகாட்டுதல்படி வரும் 6-ம் தேதி முதல் அங்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

