புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் முறையிலான காப்பீடு பதிவு செய்வதைக் கட்டாயமாக்கிய உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக உடனடியாக சுற்றறிக்கை பிறப்பித்த தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது.
சாலை விபத்து மரணத்தில் இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், செப்டம்பர் 1-ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில், வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை சார்பிலும் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்