
பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், கடந்த 30ஆம் தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை சுட்டிக் காட்டி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

