
இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டுக் காயமடைந்ததோடு, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் அவர்கள் பறித்துச் சென்றுவிட்டதாக காரைக்கால் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்கள், 2 பைபர் படகுகளில் நேற்று (செப்.3) காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் காரைக்கால் மீனவர்களைத் தாக்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

