
புதுச்சேரியில் புதிதாக 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப்.15) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,345 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-87, காரைக்கால்- 29, ஏனாம்- 4, மாஹே- 4 பேர் என மொத்தம் 124 பேருக்கு (2.32 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

