
புதுச்சேரியில் புதிதாக 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.26 லட்சத்தை தாண்டியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(செப். 25) வெளியிட்ட தகவலில், "புதுச்சேரி மாநிலத்தில் 5,128 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-65, காரைக்கால்- 12, ஏனாம்-4, மாஹே- 11 பேர் என மொத்தம் 92 பேருக்கு (1.79சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

