
நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், செவிலியர் சகோதரிகளுடன் 'சத்ரியன்' திரைப்படம் பார்த்ததாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் மற்ற கட்சிகளின் தலைவர்கள் உடனான சந்திப்பில் மட்டும் பங்கேற்று வருகிறார். அதே நேரம், மக்கள் பிரச்சினைக்காக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

