
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதில் 13 மாணவர்கள் முழு மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. முன்னதாகப் பொறியியல் படிப்புகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,45,045 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

