
திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டார். தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து ஆசி வழங்கினர்.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாக மதுரை ஆதீனம் உள்ளது. மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் மீனாட்சியம்மன் கோயில் அருகே இந்த ஆதீனத்தை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். இந்த மதுரை ஆதினத்தின் 292-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வந்தார். அவர், கடந்த 13ஆம் தேதி உடல்நலக் குறைவால் முக்தி அடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

