
புதுச்சேரியில் தொடர்ந்து 3-வது நாளாக கரோனா ஒரு நாள் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.17) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,269 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 36, காரைக்கால் - 2, ஏனாம் - 2, மாஹே - 20 பேர் என மொத்தம் 60 (1.84 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

