
2021- 22ஆம் ஆண்டுக்கான முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கூறும்போது, ''2021- 22ஆம் ஆண்டுக்கான முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கு மாணவர்களின் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. 2 ஆண்டு எம்எஸ்சி படிப்பு, 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி, எம்ஃபில் ஆகிய படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 15 கடைசித் தேதி ஆகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

