
"புதுச்சேரி முழுவதும் ஏறக்குறைய 70 சதவீகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக 41 கிராமங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு,"'ஆசாதிகா அம்ரித் உத்சவின்" ஒரு பகுதியாக களவிளம்பரம் மற்றும் செய்திப் பிரிவின் சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு காணொலி வாகனங்களை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

