
பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி ஆகும்.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 18,120 இடங்கள் உள்ளன. அதற்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் தொடங்கப்பட்டு நடைபெற்றது. முதலாம் ஆண்டு மற்றும் பகுதிநேரப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

