
புதுச்சேரியில் புதிதாக 151 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஆக. 18) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,424 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 83, காரைக்கால் - 32, மாஹே - 36 பேர் என மொத்தம் 151 (2.78 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

