தெற்கு ரயில்வேயில் முதல்முறையாக பசுமை ரயில் நிலையத்துக்கு வழங்கப்படும் 'பிளாட்டினம்' சான்று கோவை ரயில் நிலையத்துக்குக் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏ1 தரம், அடுத்தநிலையில் உள்ள ரயில் நிலையங்கள் பசுமை சான்று பெற வேண்டும் என, ரயில்வே அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கோவை ஆகிய ரயில் நிலையங்கள் ஏ1 தரத்தில் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்