திருப்பூரில் மதுபானக் கூடங்களில் இருந்து முறைகேடாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 500 மதுபாட்டில்களை போலீஸார் இன்று பறிமுதல் செய்து 6 பேரைக் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலை ஒட்டி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளிலும் 5 மணிக்கு மேல் விற்பனை செய்வதற்காக, மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பனை நடைபெறுவதாகத் தெரிவித்தனர். சில இடங்களில் மாலை 5 மணிக்கு மேல் மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பதாகப் புகார்கள் வந்தன. மதுபானக் கூடங்களிலேயே ஆங்காங்கே மதுபாட்டில்களை மிக அதிக விலைக்குப் பதுக்கி விற்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்