
தொல். திருமாவளவன் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று (ஆக.17) தன் 59-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

