கோவை அன்னூர் அருகே, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளரைக் காலில் விழவைத்த விவகாரம் தொடர்பாக, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்தின் ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் (விஏஓ) உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் உதவியாளரும், தண்டல்காரருமாக முத்துசாமி (56) என்பவர் பணியாற்றி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்