
தமிழ்நாடு தொழிலகக் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்துக் கடன் பெற்றதில், ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
2021-2022ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக. 25) கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பின் அவை களையப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்திப் பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

