
வேலூர் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பா.செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 60.
வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2014-2019 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்தவர் அதிமுகவின் வழக்கறிஞர் பா.செங்குட்டுவன். கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் கடந்த ஒரு வாரமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

