காரைக்கால் மாவட்ட நலவழித்துறை மற்றும் தேசிய, பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் ஆகியவற்றின் சார்பில், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம், பருத்திக்குடி அங்கன்வாடி மையத்தில் டெங்கு உலர் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆனந்த், முதுநிலை சுகாதார ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் அமுதா, கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும், டெங்கு உலர் நாளின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்