
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு செப்டம்பர் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், தடயவியல் நிபுணர் மற்றும் மின்வாரிய கோத்தகிரி உதவிப் பொறியாளரிடம் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

