வன்னியர் சமுதாயத்துக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை கேட்டபின்னரே முடிவெடுக்க முடியும் என தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது.
தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்துக்கு எதிராக சென்னையை சேர்ந்த சந்தீப் குமார் மற்றும் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்