
ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 மசோதாவை நடிகர் சூர்யா எதிர்த்திருந்த நிலையில் அவரை கண்டித்தும், அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாஜக இளஞர் அணி தீர்மானம் நிறைவேற்றியது. பாஜகவின் தனி நபர் எதிர்ப்பு நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.
ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, கடந்தாண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள ஒரு சில அம்சங்களை படைப்பாளிகள், திரையுலகினர் எதிர்த்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

