தடகள வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பயிற்சியாளர் நாகராஜனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். ஜி.எஸ்.டி. அலுவலக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் பிரைம் ஸ்போர்ட்ஸ் என்ற தடகளப் பயிற்சி அகாடமியை பிராட்வே பகுதியில் நடத்தி வருகிறார். பயிற்சிக்கு வந்த தனக்கு நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பயிற்சி வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்