
தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம், மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் 2,405 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,633 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 49 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 3,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

