பள்ளி மாணவர்களுக்கு தினமும் சத்துணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது தொடர்பாக திட்டத்தை தாக்கல் செய்யக் கோரிய மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் மனு ஒன்றை தாக்கல், அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்கு சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்யவும், 1962-63 ஆம் ஆண்டில் தமிழக அரசு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்