
திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பதற்காக அமைக்கப்படும் குழு பாரபட்சம் இல்லாத, ஊழலற்ற நியமனங்களாக இருப்பதை உறுதி செய்யக் குழுவின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மாற்றி அமைக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த ஜனவரி 2012ஆம் ஆண்டு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தனது திரைப்படங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாகப் பாகுபாடு காட்டப்பட்டு வருவதாகக் கூறி ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

