இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் 2000 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ஆனால் இந்த நிகழ்ச்சி வெற்றிபெறவில்லை என்றும் நிகழ்ச்சி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக ஏர் ஆர்.ரஹமான் தரவேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்