
புதுச்சேரியில் புதிதாக 189 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 97.03 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 7) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,756 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 129, காரைக்கால் - 33, ஏனாம்-4, மாஹே - 23 பேர் என மொத்தம் 189 (2.80 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

