தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் காகித பயன்பாட்டைக்குறைக்கும் வகையில் மின்னஞ்சல் முறையில் வழக்குகள் தாக்கல் செய்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மத்திய அரசும், உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிதின் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார், அவர் தாக்கல் செய்த மனுவில், “நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்ய அதிக எண்ணிக்கையில் காகிதங்கள் தேவைப்படுகிறது. வரும் 2024-25 ஆம் ஆண்டில் நாட்டின் காகித தேவையை பூர்த்தி செய்ய 1.5 கோடி டன் மரக்கட்டைகள் தேவைப்படும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்