
புதுச்சேரியில் புதிதாக 140 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 6) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,831 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 111, காரைக்கால் - 20, மாஹே - 9 பேர் என மொத்தம் 140 (2.05 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏனாமில் யாரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகவில்லை. மேலும், புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,763 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

