
பள்ளி மாணவர்களுக்குச் சமைக்கப்பட்ட சத்துணவை வழங்குவது தொடர்பான நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கரோனா பரவலைத் தடுக்க 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை எனவும், அதனால் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

