
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை, மார்கண்டேய அணை குறித்து மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்
கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சினை அரை நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளது. காவிரி நீர் பிரச்சினை இருக்கும்போதே கர்நாடகா தனது அத்துமீறலைத் தொடர்ந்து செய்து வருகிறது. காவிரி நீர்ப்பாதையில் மேகதாது அணை கட்டுவது தற்போது பெங்களூருவுக்குத் தண்ணீர் தேவை என்பதற்காக அணை கட்டுவது எனப் பல அத்துமீறும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

