ஜெயலலிதாவின் மரணம்தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய தமிழக அரசின் இடைக்கால மனுவையும், ஆறுமுகசாமி அணையத்துக்கு தடைகோரிய அப்பல்லோ மருத்துவமனையின் மேல்முறையீட்டு மனுவையும் இணைத்து 4 வாரங்கள் கழித்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையம் விசாரணைக்காக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள், நிபுணர்களை விசாரணைக்காக ஆணையத்தில் நேரில் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பினர்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்