வள்ளுவர் கோட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, 10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டத்தை பராமரிக்காமல் விட்டுவிட்டதால் மோசமான நிலையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்க உள்ளதாக தெரிவித்தார். சுற்றுலா பயணிகள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்படும், நூலகம் மற்றும் ஆய்வரங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (2.07.2021) வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து பகுதிகளையும் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா,முதன்மை தலைமைப் பொறியாளர் விஸ்வநாத் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்