தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறும், மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீட்டை 25% லிருந்து 10% ஆக குறைத்து அரசு மருத்துவமனைகளுக்கான உள் ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்துமாறும் வலியுறுத்தி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில் தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க உடனடியாக தடுப்பூசிகள் எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும், 75%-25% என்கிற விகிதாச்சாரத்தை மாற்றி 90-10 என்கிற விகிதாச்சாரத்தில் அரசுக்கு தடுப்பூசிகளை ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்