“மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளின் காரணகர்த்தா, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் வேண்டப்பட்டவர்” என்றெல்லாம் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்பி-யான சு.வெங்கடேசன் ஆகியோரால் முந்தைய ஆட்சியில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டவர் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன். அப்படிப்பட்டவர் இப்போது திண்டுக்கல் ஆட்சியராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இவரது நியமனம் குறித்து மாவட்ட அமைச்சரான ஐ.பெரியசாமிக்கே தாமதமாகத்தான் தெரிந்ததாம். அப்படியானால் விசாகனை இங்கு கொண்டு வந்தது யார் என்று கேட்டால், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியைக் கைகாட்டுகிறார்கள். மூர்த்தி மதுரையில் எதிர்க்கட்சி எம்எல்ஏ-வாக இருந்தபோது, அவருக்கு செய்யவேண்டிய ‘மரியாதை’களை குறைவின்றி செய்தாராம் விசாகன். அந்தப் பாசத்தில் தான் அவரை பக்கத்து மாவட்டத்துக்கே சிபாரிசு செய்தாராம் மூர்த்தி.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்