தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து 50 சதவீதப் பயணிகளுடன் அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடங்கியுள்ளது. எனினும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயம் என்ற விதிமுறை தொடர்கிறது. இ- பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த மே 10-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு 50 நாட்களைக் கடந்த நிலையில், இன்று முதல் 23 மாவட்டங்களுக்கு இடையே 50 சதவீதப் பயணிகளுடன் அரசுப் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்