ஜூன் 16-ல் கல்லணையில் இருந்து டெல்டா குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஏழு அமைச்சர்கள், பத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தண்ணீர் திறக்கப்பட்டதுமே வானத்தில் கருடன் பறந்தது. அதை பயபக்தியுடன் பார்த்த அமைச்சர் கே.என்.நேரு, “சகுனம் நல்லா இருக்குப்பா” என்று சொல்லி பெரிய கும்பிடாய் போட, அங்கிருந்த மற்றவர்களும் கருட தரிசனம் செய்தனர். அப்போது நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனும் அலைபேசியில் நேருவை அழைக்க, அவரிடமும் கருடன் சகுனத்தைச் சொல்லி சந்தோஷப்பட்டார் நேரு.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்