
கரோனா தொற்று பாதித்து பலியான வழக்கறிஞர்கள், கிளார்க்குகளுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், கரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 64 ஆயிரம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதும் 230 வழக்கறிஞர்கள் கரோனா பாதித்து பலியாகியுள்ளனர் எனவும், கரோனாவுக்கு பலியான தமிழக அரசு ஊழியர்கள், நீதித்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியாக தமிழக அரசு வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

