தாமதமாக பதிவிட்டு இறப்புச் சான்றிதழ் கோரினால், அதற்கு உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் வசூலிக்கப்படும் தாமதக் கட்டணத்தை ரத்து செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் விருத்தாசலம் நகராட்சியில் இறப்புச் சான்றிதழுக்கு கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் வளர்ச்சி திட்டங்களை வகுக்க பிறப்பு, இறப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் அவசியம். அதற்காக 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்புப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி, 2000-ம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்புப் பதிவு விதிகள் உருவாக்கப்பட்டது. அதில், கடந்த 2017-ம் ஆண்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்