ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை நிர்பந்திக்க கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என தமிழக அரசு கடந்த உத்தரவு பிறப்பித்திருந்தும், தனியார் பள்ளிகள், தொடர்ந்து இச்செயல்களில் ஈடுபடுகிறது, அவற்றின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்