இந்தியன் 2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்