கரோனாவால் கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. இதனால் பல அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக்குக் கூட்டம் அலைமோதும் நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரியில் 283 அரசுப் பள்ளிகளும், 32 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. 181 தனியார் பள்ளிகள் உள்ளன. மொத்தமுள்ள 57 சதவீத அரசுப் பள்ளிகளில் 32 சதவீத மாணவர்களே படிக்கின்றனர். மேலும், அரசுப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். எனினும் தனியார் பள்ளிகளில்தான் அதிக அளவில் குழந்தைகள் படித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்